மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்...!

’’அதிமுக வேட்பாளர் சலேத் மேரியை முன்மொழிந்த வேலு என்ற நபர் தனது ஆதரவு கடித்தை திரும்ப பெற்றதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்’’

கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாக கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட ஐந்து பேர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 25ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு பெறப்பட்ட 13,957 மனுக்களில் 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2,530 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 11ஆம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் திரும்ப பெற்றனர். இதை தொடர்ந்து அலமேலு போட்டியின்றி தேர்வானதாக அறிவித்து அதற்கான சான்றிதழை அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கினார். இருப்பினும், அதிமுக வேட்பாளர் சலேத் மேரி தனது வேட்பு மனுவை திரும்ப பெறவில்லை எனக்கூறிய அதிமுகவினர் சிலர், தேர்தல் அலுவலர் சாமிதுரையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென காவல் துறையினரின் கட்டுப்பாட்டை‌ மீறி சாமிதுரையை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்...!

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜை தொடர்புகொண்டு கேட்டபோது , தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரையிடம் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு எப்படி நிராகரிக்கப்பட்டது என்று கள்ளக்குறிச்சி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் கேள்வி எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தன்னை ராஜசேகரன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பணி செய்ய விடாமல் தடுத்ததாக சாமிதுரை புகார் அளித்துள்ளார். அதன் மீது விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்...!

சாமிதைுரையை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் தன்னை இழிவுபடுத்தும் வகையில் திட்டியதாகவே சாமிதுரை புகாரில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அத்துமீறி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் நுழைந்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராஜசேகர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்," என்று காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர். 

கள்ளக்குறிச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரை தாக்கியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் மீது புகார்...!

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, அதிமுக சார்பில் சலேத் மேரி, கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11ஆம் வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சலேத் மேரியை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முன்மொழிந்த வேலு என்ற நபர் தனது ஆதரவு கடித்தை திரும்பப்பெற்றதால் அதிமுக வேட்பாளர் சலேத் மேரியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget