CM Stalin in Kauvery Hospital : மருத்துவமனை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.. உடல்நலம் ஒரு அப்டேட்..
வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.அடுத்தடுத்து இருபெரும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
#BreakingNews
— எழில் ஆதித்தமிழன் (@EzhilAathi) July 14, 2022
முதல்வர் மு.க ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி#cm #mkstalin4pm2024 #mkstalin @Surendhar_Twitz @Ramanat75128649 pic.twitter.com/Cy6YLoeIAV
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டில் இருந்து கொரோனா கவச உடையுடன் அவர் மருத்துவமனைக்கு சென்றதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்