தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் அதிகமாக ஒதுக்கியதற்கு, மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு வரும் ரெம்டெசிவிர் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தற்காக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவில் மிகவும் அதிகமாகி வருகிறது. இதனால் பல பகுதிகளில் படுக்கை வசதியில்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். அதேபோல பலர் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அரசு வழங்கும் மையத்தில் கூட்டமாக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது. இதனால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஒருநாளைக்கு 7000 ரெம்டெசிவிர் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்துகளின் அளவை உயர்த்தியதற்காக நன்றி. மேலும்  கொடிய பெருந்தொற்றினை எதிர்கொண்டிருக்கும் சூழலில் குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களின் தேவை இன்றியமையாதது" எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு ரெம்டெசிவிர் அதிகமாக ஒதுக்கியதற்கு, மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னதாக அரசு ரெம்டெசிவிர் வழங்கும் மையங்களில் மக்கள் கூட்டமாக கூடி வந்தனர். இதனை தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு ரெம்டெசிவிர் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அத்துடன் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட புதிய கொரோனா சிகிச்சை நெறிமுறைகளில் ரெம்டெசிவிர் பயன்பாடு குறித்து எதுவும் இடம்பெறவில்லை. ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை என்று பல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags: mk stalin chief minister piyush goyal Remdesivir union minister

தொடர்புடைய செய்திகள்

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்கள்... கொலை வழக்கான வழிப்பறி புகார் - சிக்கிய இளைஞர்!

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

ADMK Expelled Pugazhendhi: ’நேற்று மரங்கொத்தி கதை சொன்ன புகழேந்தி’ இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கதை..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!