செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த 4 கலைஞர்களுக்கு கொரோனா..!
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழாவின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 கலைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழாவின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 கலைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூரில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் 187க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சியில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சதுரங்க காய்கள் ஆட்டம் உள்ளிட்ட பல ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்த பிரம்மாண்ட கலைநிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள், செஸ் வீரர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்க உள்ள சூழலில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பங்கேற்க உள்ள அனைத்து நபர்களுக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென கலைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களுடன் தொடர்பில் இருந்த சக கலைஞர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டார். இருப்பினும், அவரது குரல்வளம் இன்னும் முழுமையாக சரியாகாதது அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்று நிகழ்சசியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Chess Olympiad 2022 : வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்...! தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்