மேலும் அறிய

School Education: பள்ளிகள் இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னையில் ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று 2ஆம் வகுப்பு  மாணவர் தீக்‌ஷித் வேன் மோதி விபத்தில் உயிரிழந்தார். அந்த விபத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்க ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் அந்தப் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில், “ சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளின் தாளாளர்கள்/ முதல்வர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து வருவதற்கு பள்ளி பேருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தி வரும் பள்ளித் தாளாளர்கள் முதல்வர்கள் பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.  மேலும் இந்த கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி வாகனங்களில் முறையாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி

பள்ளி பேருந்து வாகனங்கள் முறையாக பராமரித்து ஆண்டு தோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி வாகனங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க படாத பள்ளிபெருத்துகளை இயக்குதல் கூடாது.

ஓட்டுநர்கள் நியமனம் செய்யப்படும்போது உரிய கல்வித் தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்களை நியமிக்க வேண்டும்.

பள்ளி பேருந்து வாகனத்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும்போது பெருந்தில் உதவியாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களை பாதுகாப்பாக வாகனத்திலிருந்து இறக்கி பள்ளி வளாகத்தினுள்ளே அனுப்பப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் பள்ளி பேருத்திலிருந்து இறங்கியபின் பேருத்தின் அருகாமையில் நான்புறமும் மாணவர்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு மீண்டும் வாகனத்தை இயக்க வேண்டும்.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட பயன்படுத்தப்படும். பள்ளிப் பேருந்துகள், வேன்கள். ஆட்டோ ரிக் ஷாக்களில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட பயன்படுத்தப்படும் பள்ளிப் பேருந்துகள், வேன்கள், ஆட்டோ ரிக் ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பள்ளித்தாளாளர்/முதல்வர் உறுதி செய்யப்படவேண்டும். அவற்றில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!
ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியா? ஒன்றிய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 15 வரை சிபிஐ நடைபயணம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget