மேலும் அறிய

“சென்னையில் நிச்சயம் தண்ணீர் தேங்காது; இதையெல்லாம் செய்கிறோம்”: மேயர் ப்ரியா உறுதி

மழை நீர் வடிகாலைப் பொருத்தவரை நாங்கள் முதல்வரின் ஆலோசனைக்கிணங்க, ஐஐடியின் வழிகாட்டுதலின் படி தகுந்த ஆராய்ச்சிகள் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறோம்.

மழை நீர் வடிகாலைப் பொருத்தவரை நாங்கள் முதல்வரின் ஆலோசனைக்கிணங்க, ஐஐடியின் வழிகாட்டுதலின் படி தகுந்த ஆராய்ச்சிகள் அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் இந்த மழைக்கு சென்னையில் நீர் தேங்காது என்று மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.

வரும் செப்டம்பர் இறுதிக்குள் வடிகால் பணிகளை முடிக்குமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் முடுக்கிவிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் செப்டம்பருக்குள் 80 சதவீதம் நிறைவு பெறும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவும் தெரிவித்திருந்தார். கடந்த முறை புளியந்தோப்பு பகுதியில், மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அங்கு தண்ணீர் தேங்காது. அந்தப் பகுதியில் எல்லாம் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகளை முடித்துவிட்டனர். அதுபோல பணிகள் முடிந்த இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. கடந்தாண்டு போல இருக்காது. வழக்கமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும், அதை மோட்டார் மூலம் ஓரிரு சரி செய்துவிடுவோம். அடுத்த ஆண்டு சென்னை முழுவதும் சரியாகிவிடும் என்று கூறியிருந்தார்.

இன்று கூட அவர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த ஆண்டு சென்னையில் மழை நீர் தேங்காது என்று உறுதியளித்திருக்கிறார்.
மாநகராட்சி அறிக்கை:

சென்னையில், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று (செப் 1) ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி,  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


“சென்னையில் நிச்சயம் தண்ணீர் தேங்காது; இதையெல்லாம் செய்கிறோம்”: மேயர் ப்ரியா உறுதி

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64க்குட்பட்ட வீனஸ் நகர் முதல் பிரதான சாலை மற்றும் 200 அடி சாலை,  டெம்பிள் பள்ளி சந்திப்பில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-65க்குட்பட்ட பூம்புகார் நகர் 5வது தெரு மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை (கிழக்கு மற்றும் தெற்கு மாதா தெரு) மற்றும் பேப்பர்மில்ஸ் சாலை (லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு) ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-66க்குட்பட்ட வேலவன் நகர் பிரதான சாலை, குமரன் நகர் 80 அடி சாலை மற்றும் தணிக்காசலம் கால்வாய் பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
மேலும், வார்டு-68க்குட்பட்ட ஜகநாதன் சாலை மற்றும் எம்.எச். சாலை பகுதியில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-67க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை குறுக்கே மற்றும் எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு பகுதியில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர்  இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை உடனடியாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின்போது, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான்,  மாமன்ற உறுப்பினர்கள் எ. நாகராஜன்,  கு. சாரதா, யோக பிரியா , பி. அமுதா,  எம். தாவூத் பீ   உட்பட பலர் உடனிருந்தனர்.

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரீல்ஸால் வந்த விபரீதம்? புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!
ரீல்ஸால் வந்த விபரீதம்? புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்!
செஞ்சி சிறுமி ஹேமலதா மாயம்: 10 நாள் மர்மம்! சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - அடுத்து என்ன நடக்கும்?
செஞ்சி சிறுமி ஹேமலதா மாயம்: 10 நாள் மர்மம்! சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு - அடுத்து என்ன நடக்கும்?
வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய தாசில்தார்.. கண்ணீரில் கணவரை இழந்த பெண்.. தவிப்பில் குழந்தைகள்
வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய தாசில்தார்.. கண்ணீரில் கணவரை இழந்த பெண்.. தவிப்பில் குழந்தைகள்
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (22-10-2026) எத்தனை இடங்களில் மின் தடை ? - மின் வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
பகைகள் வளரும், தலைகள் சிதறும்! சுள்ளான் மதன் கொலைக்கு பழிவாங்க இன்ஸ்டாவில் ரீல்ஸ்!
coimbatore power cut: கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-10-2026) எங்கெல்லாம் மின் தடை இருக்கு? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
அப்படி என்ன அவசரம்.. டிரஸ் கூட மாத்த விடாமல் 5 மணிக்கு கைது செய்யும் அளவுக்கு.. கொதிக்கும் கனிமொழி!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
Embed widget