Chennai Rain: சென்னை வரலாற்றில் முதன்முறையாக... கடந்த 30 நாளில் 23 நாட்கள் மழை!
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 30 நாட்களில் 23 நாட்கள் மழை மட்டுமே பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்தமான் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலத்திற்கு பிறகு 24 மணிநேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் சின்னமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4 ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும்.
இதன் காரணமாக, டிசம்பர் 4 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், இந்த புயலானது கரையை கடந்த பின்னர், தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது.
23 rainy days in Chennai City this November. One of the all time highest and the rains rarely gave break this monsoon to recover. https://t.co/7czalb47fl
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 2, 2021
இதுதொடர்பாக, சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 30 நாட்களில் 23 நாட்கள் மழை மட்டுமே பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதில், கடந்து வந்த நவம்பர் மாதத்தில் சென்னை மாநகரில் 23 நாட்கள் மழை பெய்துள்ளது. எல்லா ஆண்டுகளையும் ஒப்பிடும்போது, இது மிக உயர்ந்த மழைப்பொழிவு காலம். இதில் இருந்து மீண்டு வர சிறிது நாட்கள் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்