மேலும் அறிய

Chennai Metro Train: ”நாளை ரூ.5 மட்டுமே கட்டணம்” - சென்னை மெட்ரோவில் ஆஃபர்.. ஆனால் ஒரு கண்டிஷன்..!

சென்னையில் உள்ள போக்குவரத்து சாதனங்களில் மிகவும் முக்கியமான இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்துள்ளது மெட்ரோ ரயில்கள்.

 சென்னை மெட்ரோவில் நாளை (டிசம்பர் 3) பயணிகள் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னையில் உள்ள போக்குவரத்து சாதனங்களில் மிகவும் முக்கியமான இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்துள்ளது மெட்ரோ ரயில்கள். இதனால் சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை ஓரளவு தீர்வை கண்டுள்ளது. இத்தகைய மெட்ரோ ரயில்கள் சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூருக்கு ஒரு வழித்தடத்தில் இயங்குகிறது. 

மற்றொரு வழித்தடமாக விமான நிலையம் தொடங்கி விம்கோ நகர்  வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் பொதுமக்கள் தவிர்த்து வெளியூரில் இருந்து வருபவர்களும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதால் ஒவ்வொரு மாதமும் பயணிப்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நடப்பாண்டில் செப்டம்பர்  மாதத்தில் 84.37 லட்சம் பயணிகளும், அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பயணிகளும் பயணித்தார்கள். தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 80,01,210 பேர் பயணித்துள்ளனர். 

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தாமதமில்லாமல் சேவை வழங்கும் பொருட்டு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மெட்ரோ கார்டு,  க்யு.ஆ.ர். குறியீடு (QR Code), வாட்ஸ் அப் மூலம் பயணச்சீட்டு பெறும் முறையில் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே பயணிகள் எண்ணிக்கையை கருத்தி கொண்டு அவர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க மெட்ரோ ரயில் நிர்வாக முடிவு செய்தது. இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் மாதவரம்-சிறுசேரி, பூந்தமல்லி-கலங்கரை விளக்கம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படியான நிலையில் மெட்ரோ நிர்வாகம் சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டிசம்பர் 3 ஆம் தேதியான நாளை ஒருநாள் மட்டும் க்யூ.ஆர். கோடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோவில் எங்கு வேண்டுமானாலும் ரூ.5 கட்டணத்தில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அடித்தள நாளை (நிறுவப்பட்ட தினம்) முன்னிட்டு இந்த சலுகையானது வழங்கப்படுகிறது.

அதேசமயம் சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சி.எம்.ஆர்.எல். மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆ.ர். ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Chennai Metro Train: நவம்பரில் இத்தனை லட்சமா? மெட்ரோ ரயிலில் ஜெட் வேகத்தில் உயரும் பயணிகள் எண்ணிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget