மேலும் அறிய

Madras High Court: மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? தேர்தல் ஆணையம் பரிசீலிக்க நீதிமன்றம் போட்ட ஆர்டர்!

மதிமுக அளிக்கும் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன.

மதிமுகவுக்கு கிடைக்குமா பம்பரம் சின்னம்? 

கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தனை இடங்கள் தந்தால் கூட்டணி வைக்கலாம் என சில கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்  சின்னத்தை ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.  மதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளதாகவும், இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு:

பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் ஆஜராகி மக்களவை தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானலும் அறிவிக்கலாம் என்பதால் தனது விண்ணப்பத்தை விரைந்து பரீசிலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். இதையடுத்து, மதிமுக அளித்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர். 

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து  தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | நான் ரெடி.. நீங்க ரெடியா? நேருக்கு நேர் வாங்க மோடி.. ராகுல் சரமாரி கேள்விPosco Cases | 30,000 சிறுமிகள் கர்ப்பம் தமிழ்நாட்டின் அவலம்!Shakeela Vs Bayilwan Ranganathan | ”அவ நாக்கு அழுகிடும்” சகீலா-பயில்வான் மோதல் சர்ச்சையில் விவாதம்Police Inspection at Savukku house | சவுக்கு வீட்டில் கஞ்சா சிகரெட்கள்.. தனிப்படை சோதனையில் பறிமுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Crime: காரில் வைத்து கொல்லப்பட்ட பெண்; புதைக்க முயன்றபோது மடக்கி பிடித்த போலீஸ் - சிக்கியது எப்படி?
காரில் வைத்து கொல்லப்பட்ட பெண்; புதைக்க முயன்றபோது மடக்கி பிடித்த போலீஸ் - சிக்கியது எப்படி?
TN Headlines: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வீரபாண்டி தேரோட்டம் - இதுவரை இன்று!
TN Headlines: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வீரபாண்டி தேரோட்டம் - இதுவரை இன்று!
Embed widget