IAS-க்கு போட்டியாக TAS? - உயர்நீதிமன்ற யோசனையால் பரபரப்பு...!
துணை ஆட்சியர் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில சிவில் சர்விஸின் கீழ் வராதவர்களில் 5% அந்த சர்வீஸில் நியமிக்கப்படுகின்றனர்
தமிழக அரசில் பணியாற்றும் அனைத்து குரூப் 1 அதிகாரிகளும் ஐஏஎஸ்க்கு இணையான அந்தஸ்து பெறும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது.
குரூப் 1 தேர்வு மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உதவி இயக்குனர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவி வகிக்கும் தங்களை மாநில அரசின் சிவில் சர்விஸில் சேர்க்கக் கோரி ஆனந்தராஜ் உள்ளிட்ட 98 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியர் என்ற அந்தஸ்தின் கீழ் சில பதவிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில சிவில் சர்விஸின் கீழ் வராதவர்களில் 5% அந்த சர்வீஸில் நியமிக்கப்படுகின்றனர் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் 7 அல்லது 8 ஆண்டுகளில் ஐ ஏ எஸ் அந்தஸ்து பெறும் நிலையில் பிற துறைகளில் உயர்ந்த பதவியில் இருந்தாலும், 30 ஆண்டுகள் தேவைப்படுகிறது. தமிழக அரசில் பணியாற்றும் அனைத்து குரூப் 1 அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் வகையில், தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.