மேலும் அறிய

Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

சென்னையில் நேற்று இரவு பெய்த மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் கனமழை கொட்டித் தீர்ப்பது வழக்கம். குறிப்பாக, சென்னைக்கும் மழைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. 

சென்னையை மிரட்டிய மழை:

தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தலைநகரான சென்னையில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாலை முதல் நள்ளிரவு வரை பெய்த மழையால் சென்னையின் பல பகுதிகளும் ஸ்தம்பித்தது. 

நிரந்தர தீர்வு எப்போது?

கடந்த 2016 வெள்ளத்தில் இருந்து சென்னையில் எப்போது பெருமழை வந்தாலும் மக்கள் ஒரு வித அச்சத்திலே தவிக்கும் அவல நிலை உள்ளது. திட்டமிடாத கட்டிட அமைப்பு, ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, முறையான கழிவு நீர்  வெளியேறும் அமைப்பு இல்லாதது என பல குற்றச்சாட்டுகள் சென்னையின் இந்த அவலநிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இப்படி, பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான நிரந்தர தீர்வு இதுவரை யாராலும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு தீர்வு காண கடந்த கால திமுக, அதிமுக ஆட்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு முழுமையான பலன் இதுவரை கிடைக்கவில்லை.

தவெக அரசுக்கு எச்சரிக்கை:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு நேற்று பெய்த மழை மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏனென்றால், தவெக ஆட்சிப்பொறுப்பேற்றதுமே அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது சென்னை பெருமழை என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று பெய்த பெருமழையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வாசலில் மழைநீர் குளம்போல தேங்கியது. வழக்கமாக மழைக்காலங்களில் அவதிப்படும் மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் ஆறு போல பல மணி நேரம் ஓடியது. ஓட்டேரி, பெரம்பூர் என வட சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சென்னைவாசிகள் அச்சம்:

தவெக அரசு வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் நேற்று பெய்த மழை இந்த பணிகளின் வேகத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதையே உணர்த்தியுள்ளது. தற்போதே இந்த நிலை என்றால், டிசம்பர் மாதம் என்ன கதி ஏற்படும்? என்று சென்னைவாசிகள் அச்சப்படுகின்றனர். 

தொலைநோக்கு பார்வையுடன் திட்டம்:

இந்த சூழலுக்கு தவெக அரசு தற்காலிக தீர்வு காண்பது மட்டுமின்றி நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே சென்னையை வருங்கால வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இயலும். இதற்காக நீர்வழித்தடங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 

மேலும், தொலைநோக்குடன் திட்டத்தைச் செயல்படுத்தி வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் மழைநீர் துளியளவும் தேங்காமல் இருப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்! ஆகம விதிகள் மீறப்பட்டதா? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
School Student: 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அக்டோபர் 31 வரை கெடு! அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget