Chennai Coronavirus : வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு உதவ 2 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமனம்
Chennai Coronavirus : சென்னையில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக 2 ஆயிரம் தன்னார்வலர்களை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் , சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 347 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முறையே 970, 240, 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 3 ஆயிரத்து 756 கொரோனா பாதிப்புகளை சென்னை கண்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு (2,690), தென்காசி (2,158), கள்ளக்குறிச்சி (2,132) ஆகிய மாவட்டங்கள் 10 லட்சம் மக்கள் தொகையில் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.
சென்னை கொரோனா பாதிப்புகள் :
சென்னையில் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பேரு வருபவர்களின் எண்ணிக்கை 26194 ஆக உள்ளது.கடந்த நாடு மார்ச் மாதம் தொடங்கி சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283175 ஆக உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலையில் சென்னையின் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு கடந்த 2020, ஜூலை 1ம் தேதியன்று (2,393) பதிவு செய்யப்பட்டது. 2021 ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் கடுமையாக குறையத் தொடங்கின. கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து இரண்டாவது கோவிட் அலை சவால்களை சென்னை சந்தித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், முதன் முறையாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000ஆக அதிகரித்தது.
அதே சமயம், சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 வாரங்களில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை, அண்ணா நகர், திரு வி.க நகர் ஆகிய மண்டலங்களில் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக, புதிய தொற்றுகளை விட குணமாவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, திரு வி.க நகரில் மொத்த பாதிப்பில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக உள்ளது. கோடம்பாக்கம் மண்டத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 7 சதவீதமாக உள்ளது.
சென்னையில் இது வரை 2,55,960 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைதல் விகிதம் 89 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளோருக்கிடையேயான இடைவெளி 229766 ஆகும்.
கொரோன தடுப்பு நடவடிக்கைகள்:
1. 19.04.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 11,94,978 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,612 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2. மே 1 முதல் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்ப்பூசிக்கு தகுதியுடையவர் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 40% பேர், அதாவது சுமார் 10,500 பேர். 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டால் கொரோனா நோய்த் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்ப்படுகிறது.
3. சென்னையில் 408 தெருக்களில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட் 19 நோயாளிகள் உள்ளனர். இதில், 118 தெருக்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், தவிர கண்காணிப்பு மற்றும் முறையான ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவிடத்து.
மேலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகராட்சி 2, 000 தன்னார்வலர்களை நியமித்துள்ளது.