மேலும் அறிய

சமையல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சென்னைஸ் அமிர்தா மாணவர்கள்!

சர்வதேச அளவில் சமையல் ஒலிம்பிக் உட்பட 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் கௌரவித்தனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  ஹயாட் ரீஜென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  
ஜெர்மனியில் நடந்த ஐ.கே.ஏ./சமையல் ஒலிம்பிக்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸில்,  எமிரேட்ஸ் சலோன் கல்னியர் மற்றும் மலேசியா பேட்டில் ஆஃப் தி செஃப்ஸ் ஆகிய மூன்று சர்வதேச சமையல் போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக சென்னை அமிர்தா மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி கௌரவித்தார்.  

சமையல் ஒலிம்பிக்:

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடைபெற்ற  ஐகேஏ/சமையல் ஒலிம்பிக் வரலாற்றில் 124 ஆண்டுகளில் முதல் தங்கம் வென்று சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். 22 நாடுகளைச் சேர்ந்த சமையல் வல்லுநர்களின் கடும் போட்டியை எதிர்கொண்டு சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் இந்த சாதனையை படைத்தனர். இதில் சென்னைஸ் அமிர்தா 3 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றனர். 

சென்னைஸ் அமிர்தாவின் தங்கமங்கை அமிர்தா ஸ்ரேயா அனீஷ் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி, புட் கார்விங்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் காட்சிப்படுத்துவதில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 

சென்னை அமிர்தா மாணவர்கள்:

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னையின் அமிர்தா மாணவர்கள் 2024 மே 20 முதல் 22 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில்,  ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்ற, 27 வது எக்ஸ்போ கலினயரில்  எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் சலூன் கலினயர் 2024 இலும் வெற்றி வாகை சூடினர்.

எமிரேட்ஸ் கலினரி கில்டு நடத்திய இந்தப் போட்டியில்  அமீரகம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 911 சமையல் வல்லுனர்களுடன் போட்டியிட்டு, 39 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.   ஓட்டோ வீபிள் தலைமையிலான 23 நடுவர்கள் அடங்கிய குழு இந்த போட்டிகளில் வென்றவர்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வென்ற மாணவர்கள்:

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இது வேர்ல்ட் செஃப் அசோசியேஷன் சொசைட்டியால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த போட்டிகளில்  சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி உட்பட 3 பதக்கங்களை பெற்றனர். ஸ்ரேயா அனீஷ் மற்றும் அமிர்தா பி சதன் ஆகியோர்  பழங்கள் மற்றும் காய்கறிகளை கார்விங் செய்வதில் தங்களது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கங்களைப் வென்றனர்.

2024 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மலேசியா பேட்டில் ஆஃப் தி செஃப்ஸ் 2024 இல் பங்கேற்று மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்து மகுடம் சூட்டினர்.  மலேசியாவின் பினாங்கில் நடைபெற்ற "கான்டினென்டல் சமையல் போட்டி"  1200 க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு போட்டியாளர்கள், 65 பிரிவுகள் என பிரமாண்டமாக நடைபெற்ற போட்டி. இதிலும்  ஸ்ரேயா அனீஷ் பழங்கள் மற்றும் காய்கறிகளை கார்விங் செய்து வெண்கலப் பதக்கம் வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த வெற்றிகள், சென்னைஸ் அமிர்தாவின் கற்பிக்கும் செயல்பாடு மற்றும் மாணவர்களின் சமையல் திறன், அர்ப்பணிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

மாணவர்களை கௌரவப்படுத்திய துணைவேந்தர்:

சென்னைஸ் அமிர்தா அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் இணைந்த சமையல் கல்விக்கான  உறுதியான அணுகுமுறை, மாணவர்களை உலக அரங்கில் தொடர்ந்து வெற்றிக்கு உயர்த்தியுள்ளது. அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றுகையில், தொழில்துறை மற்றும் தொழில் வல்லுநர்களோடு போட்டியிட்டு, சர்வதேச அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்ற பிஎஸ்சி மாணவர்களான  ஸ்ரேயா அனீஷ் மற்றும்  அமிர்தா பி.சதன் ஆகியோரால்  மிகவும் பெருமைப்படுவதாக தெரிவித்தார். 

மாணவர்களின் சாதனைகள் அவர்களின் தனிப்பட்ட திறமைகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் சென்னைஸ் அமிர்தாவில் வழங்கப்படும் கல்வி மற்றும் பயிற்சியின் திறனையும் எடுத்துக்காட்டுவதாகவும் கூறி சென்னைஸ் அமிர்தாவின்  மாணவர்களின் மகிழ்ச்சியின் உருவமாகத் திகழும் அதன் தலைவர் திரு.ஆர்.பூமநாதனுக்கு சிறப்புப் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஜி.ரவிக்கு நன்றி தெரிவித்த சென்னை அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன்,  ஹோட்டல் கல்வியில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை அமைப்பதுடன், எதிர்கால சமையல் நிபுணர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.கவிதா நந்தகுமார், சி.ஏ.டி., திரு.லியோ பிரசாத், டீன் திரு.டி.மில்டன், பல்கலைக் கழக  துறை தலைவர் திருமதி பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
கள்ளச்சாராய மரணம்! தேனியில் முதலமைச்சர் உருவபொம்மையை எரிக்க முயற்சி - பெரும் பரபரப்பு
Embed widget