மேலும் அறிய

Chennai Air Pollution: சென்னையில் பனி மூட்டத்தை போல் காட்சியளிக்கும் மாசு.. காற்றின் தரம் படு மோசம்.. காரணம் என்ன?

கார்த்திகை தீபத்தை ஒட்டி நேற்று சென்னையில் அனேக இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.

கார்த்திகை தீபத்தை ஒட்டி நேற்று சென்னையில் அனேக இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திரு கார்த்திகை தீபத்திருவிழா நேற்று மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றுவதற்காக, 3,500 கிலோ நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன (செப்பு)  ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலை மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் எற்றி வழிப்படுவர். கார்த்திகை தீபம் ஒட்டி தீபாவளி பண்டிகை போலவே பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள்.

நேற்றைய தினம் மாலை சென்னையில் அனேக பகுதிகளில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடப்பட்டதால், பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.

Chennai Air Pollution: சென்னையில் பனி மூட்டத்தை போல் காட்சியளிக்கும் மாசு.. காற்றின் தரம் படு மோசம்.. காரணம் என்ன?

இந்த நிலையில், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கார்த்திகை தீபம் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் சென்னையில் 7 இடங்களில் காற்று மாசு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. 

Chennai Air Pollution: சென்னையில் பனி மூட்டத்தை போல் காட்சியளிக்கும் மாசு.. காற்றின் தரம் படு மோசம்.. காரணம் என்ன?

காற்றின் தரக்குறியீடு படி, சென்னையில் அதிகபட்சமாக ஆலந்தூர்- 320, பெருங்குடி – 278, மணலி- 171, ராயபுரம் - 237, அரும்பாக்கம்- 210, கொடுங்கையூர் – 154, எண்ணூர் - 243  என்ற அளவீட்டில் காற்று மாசு பதிவாகியுள்ளது.

Chennai Air Pollution: சென்னையில் பனி மூட்டத்தை போல் காட்சியளிக்கும் மாசு.. காற்றின் தரம் படு மோசம்.. காரணம் என்ன?

காற்று மாசு 0-50 ஆக இருந்தால் நல்ல நிலையில் சுவாசிக்க ஏற்றது. 51-100 வரை இருந்தால் ஏற்கனவே சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். 100-200 வரை இருந்தால் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும். 201-300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருப்பதாகவும் தொடர்ந்து சுவாசித்தால் நுரையீரல் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 301 – 500 வரை இருந்தால் காற்றின் தரம் படு மோசமாக இருப்பதாகவும் சுவாசிக்க உகந்த காற்று இல்லை ஆரோக்கியமான மனிதர்களையும் கடுமையாக தாக்கும் என்பதாகும்.

சென்னையில் ஒட்டுமொத்தமாக மற்ற நாளில் 80 வரை இருக்கும் நிலையில் நேற்று 320 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. நகரில் தற்போது காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளதால், தற்போது பலருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.

TN Rain Alert: இன்று மாலை உருவாகிறது புயல்... - தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த வானிலை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
David Warner: செம்ம! நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்.. என்ன படம்? யாரு ஹீரோ தெரியுமா?
Trump AI Video Viral: அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
அறியா வயது முதல் அதிபர் வரை.. வைரலாகும் ட்ரம்ப் குறித்த அசத்தலான ஏஐ வீடியோ...
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
IND vs AUS: சுழட்டி.. சுழட்டி.. பந்துபோடும் இந்தியா.. திணறி திணறி ஆடும் ஆஸ்திரேலியா! இதாம்ல அட்டாக்!
China Vs America Tariffs: வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
வகை வகையாக பிரித்து அடிக்கும் சீனா.. அப்செட்டான அமெரிக்கா...
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
IND vs AUS: இந்தியாவிற்கு எதிராக இந்தியரை இறக்கிய ஆஸ்திரேலியா! யார் இந்த தன்வீர்சங்கா?
Embed widget