Chengalpattu Hospital News: செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு; நடவடிக்கை எடுக்க எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே மரணங்களுக்குக் காரணமென்றும் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10:30-மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 8- நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அங்கும் குறைந்த அளவிலேயே இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‛‛தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாகவும், இதை எதிர்பாராத இறப்பாக கருதுவதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும்,’’ தெரிவித்தார். அடுத்தடுத்து ஆக்ஜிசன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சிகிச்சைக்கு வந்த 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், 11 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

11 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே மரணங்களுக்குக் காரணமென்றும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்@RAKRI1
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 5, 2021

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே மரணங்களுக்குக் காரணமென்றும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் நிகழ்ந்ததைப் போன்று தமிழகத்தில் இது போன்ற கோர காட்சியை காண்பது இதுவே முதன்முறை என்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.