மேலும் அறிய

அக்டோபர் முதல் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் கல்வி, மருத்துவம் மேம்பட இந்தியா இலங்கை கப்பல் சேவை பாலமாக அமையும்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் நடுகடலுக்கு சென்ற அமைச்சர் கப்பல் வரும் பாதை மற்றும் துறைமுகத்தில் தூர்வாரும் பணி உள்ளிட்டவர்களை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள், பயணியர் முனையம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

அக்டோபர் முதல் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
 
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அமைச்சர் எ.வ.வேலு  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 
“நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேச துறைமுகத்திற்கு  கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 150 பயணிகள் பயணம் செய்யும் வகையில் பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பட்சத்தில் தெரிவித்தார்.

அக்டோபர் முதல் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
 
மேலும் நாகப்பட்டினம்.துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் வரும் 2ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் ஒன்றிய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் கல்வி, மருத்துவம் மேம்பட இந்தியா இலங்கை கப்பல் சேவை பாலமாக அமையும் வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால துறைமுகத்திலிருந்து தொடங்கும் கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என கூறினார். இந்தியாவிற்கு வரும் இலங்கை பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு குறித்த படைப்புகள் சுவர் ஓவியங்களால் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
Cooking Oil Price Hike: அடுத்த அதிர்ச்சி.. போரால் உயர்ந்த சமையல் எண்ணெய் விலை.. முடியல சாமி!
Cooking Oil Price Hike: அடுத்த அதிர்ச்சி.. போரால் உயர்ந்த சமையல் எண்ணெய் விலை.. முடியல சாமி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
Parthiban: கோல்மூட்டி விடுகிறாரா பார்த்திபன்? அஜித்தை புகழ்ந்து விஜய் மீது அட்டாக்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள்.. தமிழக அரசின் அசத்தல் முயற்சி.. இதோ இணையதளம்!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
Embed widget