வீட்டில் பூட்டிய அறை.. தேடி வந்த சிபிஐ.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சோதனை!
விசா முறைகேடு தொடர்பாக சென்னையிலுள்ள கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டிலுள்ள பூட்டிய அறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
![வீட்டில் பூட்டிய அறை.. தேடி வந்த சிபிஐ.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சோதனை! CBI raids Karti Chidambaram's house locked room connection with visa scam வீட்டில் பூட்டிய அறை.. தேடி வந்த சிபிஐ.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சோதனை!](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2019/05/29122019/Karti-Chidambaram.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிபிஐ சோதனை:
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் பூட்டிய அறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மே மாதம் சோதனை நடத்திய போது வீட்டின் அறை பூட்டி இருந்ததால், தற்போது சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்கியதாக கடந்த மே மாதம் கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
மே மாதம் சோதனை:
2010 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சீன நாட்டினர் இந்தியாவுக்குள் வருவதற்கு, சட்ட விரோதமாக 250-க்கு மேற்பட்டோருக்கு விசாக்கள், கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனத்தின் மூலமாக வழங்கியதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் கார்த்திக் சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதனை தொடர்ந்து சென்னை , மும்பை, கர்நாடகா,பஞ்சாப் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது. அப்பொழுது சென்னையிலுள்ள கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டிலுள்ள அறை, பூட்டியிருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டிலுள்ள பூட்டிய அறையில் சோதனை நடத்தப்பட்டது.
View this post on Instagram
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)