மேலும் அறிய

விலை குறைவு..கடன் வசதி.. - பழைய வீடு வாங்குவதில் இருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் !!

புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்வால், நடுத்தர மக்கள் தற்போது பழைய வீடுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

பழைய வீடுகள் விற்பனை படு ஜோர்

சென்னை போன்ற நகரங்களில் புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடுகளின் விலை வெகுவாக உயர்ந்து வருவது மக்களுக்கு மலைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் பழைய வீடுகளை வாங்குவதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.

இதனால் புதிய வீடுகளுக்கு இணையாக பழைய வீடுகள் விற்பனை சந்தை தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில், கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குள் உள்ள பழைய வீடுகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கடன் கொடுக்க வங்கிகள் ஆர்வம்

தற்போது வங்கிகளும் இதற்கு கடன் கொடுப்பதில் ஆர்வமாக இருப்பதால் இது போன்ற வீடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. நீங்கள் ஒரு பழைய வீட்டை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முதலில் எந்த பகுதியில் பழைய வீடு வாங்க போகிறோம் என்பதுடன் அதை கட்டி முடித்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன என்று பாருங்கள். அந்த கட்டடம் அமைந்துள்ள நிலம் தொடர்பான ஆவணங்களின் உண்ம தன்மை என்ன என்று பாருங்கள்.

இதற்கு அடுத்தபடியாக அந்த கட்டடம் எப்போது கட்டப்பட்டது அதற்கான கட்டட அனுமதி வரைபடம் உட்பட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்யுங்கள். அதில் வரைபடத்தில் உள்ளபடியே வீடு கட்டி முடிக்கப்பட்டு பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

இதில் கட்டடத்தின் மதிப்பு என்னவாக குறிப்பிட வேண்டும் என்பதை மதிப்பீட்டாளர் வாயிலாக கணக்கு பார்க்க வேண்டியது அவசியம். இத்துடன் அந்த கட்டடத்தில் விரிசல்கள், உடைப்புகள் எதுவும் காணப்படுகிறதா என்று பாருங்கள்.

கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்

சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்று விடுகின்றனர். எனவே, இது போன்ற பிரச்சனையில் சிக்கி ஏமாறாமல் இருக்க, தொழில்நுட்ப ரீதியான ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த கட்டடம் எப்போது, எப்படி கட்டியிருந்தாலும் பரவாயில்லை, அதன் தற்போதைய ஸ்திர தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். தொழில் முறை கட்டட அமைப்பியல் பொறியாளர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம்.

கடன் கொடுக்கும் வங்கிகள் இது தொடர்பாக ஆய்வு செய்வதாக கூறினாலும், அது பெரும்பாலும், பெயரளவுக்கே இருக்கும். எனவே நீங்கள் தனியார் பொறியாளர் வாயிலாக ஆய்வு செய்து கட்டடத்தின் உறுதி தன்மை குறித்த உண்மை நிலவரத்தை அறியலாம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள். சில இடங்களில் கட்டடத்தின் அடிப்படை ஆதாரமான துாண்கள், பீம்களில் உள்ள விரிசல்கள் மறைக்கப்பட்டு வீட்டை விற்று விடுகின்றனர் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தலைப்பு செய்திகள்

மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Temple Trustee : 3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget