(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai: பேருந்து, ரயில், மெட்ரோ..! எல்லாத்துக்கும் இனி ஒரே டிக்கெட்..! முதல்வர் இன்று ஆலோசனை..!
சென்னை முழுவதும் உள்ள பொது போக்குவரத்திற்கு ஒரே பயணச்சீட்டினை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காலை , சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறவிருக்கிறது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறூம் இந்த கூட்டத்தில், முக்கியமாக மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பலவகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பொதுமக்கள் ஒரே பயணச்சீட்டின் மூலம் பொது போக்குவரத்தான மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில் , புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான திட்டம் அறிமுகப்படுத்தப்படுமானால் சென்னையில் உள்ள பொது மக்களுக்கு பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படாது. மேலும், பயணச் சீட்டு கவுண்டர்களில் கூட்ட நெரிசலையும் தவிர்க்க அரசு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
View this post on Instagram
ஏற்கனவே மாநகரப் பேருந்தில் பயணிக்க மாநகர் போக்குவரத்து கழகத்தால் சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதேபோல், மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணிகளுக்கு பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் புறநகர் ரயிலில் பயணிக்க குறிப்பிட்ட இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு பயணிக்க சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் சென்னை மாநகரில் உள்ள பொது போக்குவரத்தான மாநகர் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிக்கும் பயணிகளுக்கு பயணத்தை எளிமையாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் சென்னையில் பயணப்பட மிகவும் எளிமையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.