PM condolence : செங்கல்பட்டு கோர விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்...!
செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் அடுத்துள்ள தொழுப்பேடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் பெண்கள் உள்பட 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்துள்ள தொழுப்பேடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலே 2 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணித்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Pained by the loss of lives due to an accident in Chengalpattu. My thoughts are with those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 8, 2022
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், செங்கல்பட்டு விபத்து உயிரிழப்பு வலியை ஏற்படுத்துகிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்ட பேருந்து விபத்திற்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் அரசுப்பேருந்து அப்பளம்போல நொறுங்கியது. அப்பளம் போல நொறுங்கிய இந்த பேருந்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை...! முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
மேலும் படிக்க : அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்