Breaking Live: கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார் ஓபிஎஸ், இளவரசியும் விளக்கம் அளிக்கிறார்கள்
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
கோவா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அரசின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்திடம் நாளையும் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.
சிசிடிவியை அகற்றுமாறு நான் எதுவும் கூறவில்லை - ஓபிஎஸ்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியே - ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம்

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்ல வலியுறுத்தினேன் - ஓபிஎஸ் தகவல்
அண்ணா, எம்ஜிஆர் போல ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லலாம் என்று அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கார், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.