மேலும் அறிய
Black Fungus : கருப்புப்பூஞ்சை நோயால் செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழப்பு : அச்சத்தில் மக்கள்
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வந்தது . அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு பூஞ்சை நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இதற்கிடையில் , நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்புப்பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின்போது கருப்பு பூஞ்சை தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை தாக்கம் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார் .

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள அமைந்தக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், வயது 40. இவர் மாம்பாக்கம் டாஸ்மாக் மதுபான கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் ரமேஷுக்கு உடல்நலக்குறைவு பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிய பிறகு சில நாட்களில் ரமேஷுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ரமேஷுக்கு கருப்புப்பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவரது இடது கண் அகற்றப்பட்டு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 நபர்கள் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் மேலாளர் முதல் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் இந்நிலையில் கருப்பை பூஞ்சை நோயும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement