மேலும் அறிய

Tiruvannamalai: 'அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்’ .. திருவண்ணாமலையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்..!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் இன்று (நவம்பர் 26) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வானது தமிழ்நாட்டை பொறுத்தவரை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படுவது பிரசித்தி பெற்றது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17 ஆம் தேதி  தொடங்கியது. 

இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிகழ்வில் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்  ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. வேத மந்திரங்களை முழங்க அரோஹரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த 2 நிகழ்ச்சிகளுக்குமான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.அதற்கு முன்னதாக பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டப எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கும் வைபவம் இடம் பெறுகிறது.

மகா தீப நிகழ்வு முடிந்தவுடன் இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள், வாகனங்களில் வரும் பக்தர்கள் பார்க்கிங் செய்ய வேண்டிய இடங்கள் போன்றவை குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதேசமயம் மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு  பல நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இதற்கான இன்று அதிகாலை முதல் திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும். அங்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam AadmiAjith praises MK Stalin: ”தமிழ்நாடு தான் மாஸ்!” ஸ்டாலினுக்கு அஜித் பாராட்டு! சாதித்து காட்டிய உதய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Embed widget