Watch Video | பெண்ணை கை நீட்டி மிரட்டினாரா அண்ணாமலை? வீடியோ வெளியிட்டு ட்வீட்..
பெண்ணை கை நீட்டி மிரட்டிய பேசுவதுபோல் உள்ள புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்து அண்ணாமலை வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெண்ணை கை நீட்டி மிரட்டுவது போல வெளியான புகைப்படத்திற்கு, தற்போது அவரே அதற்கு விளக்கமளித்து, திமுகவினவரையும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதில் ஒரு புகைப்படத்தில், அண்ணாமலை ஒரு பெண்ணிடம் கை நீட்டி பேசுவதுபோல் இருந்தது. அதன்பிறகு, அண்ணாமலை பெண்ணை மிரட்டி பேசுகின்றார் என்று திமுகவினர் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த நிலையில், பெண்ணை கை நீட்டி மிரட்டிய பேசுவதுபோல் உள்ள புகைப்படத்திற்கு விளக்கம் கொடுத்து அண்ணாமலை வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், திமுகவினரை விமர்சித்தும் அவர் பதிவை இட்டுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், 200 ரூபாய் சம்பளம் கொடுக்கும் அறிவாலய நாடக கம்பெனி, மோசமான ஊதியம் பெறும் சில கலைஞர்களால் வழிநடத்தப்படுகிறது. எப்போதும் போல் செயல்படவில்லை.1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடக நிறுவனம் ஒரு அரசியல் கட்சியாக எவ்வாறு செயல்படுகிறது. இப்போது ஆட்சியில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இணைக்கப்பட்டுள்ள வீடியோவை (அடுத்த ட்வீட்டில்) பார்க்கவும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
The paid ₹ 200 group of @arivalayam drama company led by some poorly paid - out of form artists - in action as always!
— K.Annamalai (@annamalai_k) November 12, 2021
Kindly see the attached video (in next tweet) to understand how the drama company started in 1949 is functioning as a political party & is in power now!
1/2 pic.twitter.com/9V2zUtku8v
அடுத்த ட்விட்டில், என்னவென்று புரிந்துகொள்ள இந்த வீடியோவை இங்கே பாருங்கள் குறிப்பிட்ட அண்ணாமலை, பாஜகவுக்கு எதிராக உள்ள 200 ரூபாய்க்கு வேலை செய்யும் மோசடிக்காரர்களும், சூட் & பேண்ட் அணிந்து கொண்டு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் சில பெரிய மோசடிக்காரர்களும் தான் என்று பதிவிட்டுள்ளார்.
See this video here to understand what @BJP4TamilNadu is against - it’s simply crooks who work for ₹ 200 & some bigger crooks who wear suit & pant and sit in DMK IT Wing office!
— K.Annamalai (@annamalai_k) November 12, 2021
2/2 pic.twitter.com/UxYcuCLii4
வள்ளுவர் கோட்டம் பத்திரிக்கரை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு உணவு வழங்க வந்த போது அங்கிருந்த மக்கள் குளிருக்குப் போர்வை இன்றி அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
— K.Annamalai (@annamalai_k) November 12, 2021
அவர்கள் இன்னல் நீக்க இன்று போர்வைகளுடன் கட்டிலும் கொடுத்தோம்.
அவதியுற்ற மக்களுக்கு ஆறுதல் தர முடிந்த ஆத்மதிருப்தி. pic.twitter.com/5CO57wzSNB
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்