தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
Aavin - Amul: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அமுல் நிறுவனம் பால் விற்பனை செய்து வருவதாக தகவல் வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அமுல் நிறுவனம் பால் விற்பனையை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் பால்வளத்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் நிறுவனம்:
தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் , பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, பால், தயிர், நெய், இனிப்பு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யவதாக தகவல் வெளியானது. சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
பால்வளத் துறை மறுப்பு:
இந்நிலையில், இந்த செய்தி குறித்து தமிழ்நாடு பால்வளத்துறை விளக்கமளித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அமுல் நிறுவனம் பால் விற்பனையை செய்து வருவதாக இருந்த தகவல் உண்மையில்லை. தமிழ்நாட்டில் பால் பண்ணையை, அமுல் நிறுவனம் அமைக்கவில்லை. மேலும் , 2 மாதங்களில் பால் பாக்கெட்டுகளில், பால் விற்பனை செய்யவுள்ளதாக என்று பரவி வரும் தகவலும் உண்மையில்லை என பால்வளத்துறை தெரிவித்துள்ளது.
அமுல் நிறுவனம்:
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுவது போன்று, அமுல் நிறுவனமானது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமுல் நிறுவனமானது பால் சார்ந்த பொருட்களான தயிர் , நெய், இனிப்பு பொருட்கள் ஆகியவை பல மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது.
அமுல் நிறுவனமானது பால் பாக்கெட்டுகள் மூலம், தமிழ்நாட்டில் விற்பனை செய்யவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மீண்டும் தகவல் வெளியாகி வருகிறது.
இரண்டு மாதங்களில், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனமானது பால் பாக்கெட்டுகள் விற்பனையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஆவின் நிறுவனத்துக்கும் அமுல் நிறுவனத்துக்கும் போட்டி ஏற்படும் என்றும், ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவானது குறையும் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனமானது பால் பாக்கெட்டுகள் மூலமாக விற்பனை செய்யவில்லை என்றும், பால் பண்ணை அமைக்கவில்லை என்றும் பால்வளத்துறை தெரிவித்துள்ளது.