மேலும் அறிய

Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொதுவேட்பாளராக களமிறக்குவதில் திமுக, அதிமுக-விற்கு உள்ள சிக்கல்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Ambasamudram ByPoll 2026: தமிழ்நாட்டில் இன்னும் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று கருதப்படுகிறது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக அபார வெற்றி பெற்றது. 

பொது வேட்பாளர் சீமான்:

இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்க்கமாக உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக முடிவு செய்யும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக களமிறங்க  இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. அதிமுக ஆதரவு கிடைத்தால் சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனால், சீமானை பொதுவேட்பாளராக களமிறக்குவதில் என்னென்ன சவால்கள் உள்ளன? என்பதை கீழே காணலாம்.

1. திராவிட கட்சிகள் ஆதரவா?

திராவிடத்திற்கு எதிராகவும், திராவிட கட்சிகளுக்கு எதிராகவும் தோன்றிய கட்சி நாம் தமிழர். திமுக-வை மிக கடுமையாக விமர்சித்து தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. தமிழ் தேசியத்தை முன்னெடுத்து திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்ததாலும், இலங்கை இறுதிப்போரில் திமுக-வின் செயல்பாடுகளை விமர்சித்துமே தமிழ்நாட்டில் நாம் தமிழர் தனக்கென மிகப்பெரிய வாக்கு வங்கியை உருவாக்கியது.

திராவிடம் மற்றும் திமுக-வை தனது எதிரியாக கொண்டு உருவான நாம் தமிழர் தற்போது தேர்தலுக்காக திராவிட கட்சிகளின் ஆதரவுடன் களத்தில் இறங்கினால் சீமானுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகும்  வாய்ப்புகள் பிரகாசம். எதிர்காலத்தில் நாம் தமிழர் திமுக-வுடன் கூட்டணி வாய்ப்பதற்கான அடித்தளமாகவும் இது மாறும். அவ்வாறு அரங்கேறினால் சீமானின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் சரிவதுடன், நாம் தமிழர் வாக்கு வங்கியும் மிகப்பெரிய அளவில் சரியும்.

2. திமுக - அதிமுக மறைமுக கூட்டணியா?

அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்றால் திமுக ஆதரவு அளிப்பது மட்டுமின்றி அதிமுக ஆதரவு அளிப்பதும் அவசியமாகும். அவ்வாறு திமுக - அதிமுக ஆதரவுடன் சீமான் களமிறங்கினால் தவெக-விற்கு அது சவாலாக மாறும். ஆனால், அதுவே திமுக - அதிமுக-விற்கு பின்னடைவாகவும் மாறும்.

ஏனென்றால், தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவெக தவித்தபோது திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர். அந்த குற்றச்சாட்டிற்கு அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் மறுப்புத் தெரிவித்த நிலையில், சீமானுக்கு இரு கட்சியினரும் ஆதரவு அளித்தால் அவர்களின் மறைமுக கூட்டணி உறுதி செய்யப்படும். 

3. அதளபாதாளத்திற்கு செல்லும் இபிஎஸ் செல்வாக்கு:

அம்பையில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு சீமானுக்கு ஆதரவு அளித்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அதிமுக-வே ஆகும். ஏனென்றால், இந்த தொகுதி அதிமுக-விடம் இருந்து பறிபோன தொகுதியாகும். இந்த தொகுதியை மீண்டும் அதிமுக கைப்பற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில், தாங்கள் பறிகொடுத்த தொகுதிக்கு மற்றொரு கட்சியைச் சேர்ந்தவருக்கு ஆதரவு அளிப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை உண்டாக்கும்.

இதைக்காட்டிலும் தேர்தலுக்கு முன்பு திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்தாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், திமுக ஆதரவுடன் களமிறங்கும் சீமான் களமிறங்கி, அதற்கு அதிமுக ஆதரவு அளித்தால் யாருக்கு எதிராக எம்ஜிஆர் கட்சி தொடங்கினாராே? ஜெயலலிதா யாரை எதிரியாக கொண்டு கட்சியை நடத்தினாரோ? அவர்களுடன் அதிமுக கை கோர்ப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் துளியளவும் ஏற்கமாட்டார்கள். இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தியை கட்சியில் உண்டாக்கும். இதனால், அவருக்கு மிகப்பெரிய நெருக்கடி உண்டாகும்.

4. பலம் பெறும் தவெக:

திமுக - அதிமுக ஆதரவுடன் சீமான் களமிறங்கினால் அது தவெக-்றகு ஒரு பக்கம் நெருக்கடி அளிப்பது போல தோன்றினாலும், அதையே தங்கள் துருப்புச்சீட்டாக விஜய் மாற்றுவதற்கு வாய்ப்புகள் மிக பிரகாசம். மேலே கூறிய அதிமுக - திமுக கூட்டணி, திராவிட கட்சிகள் பக்கம் சாய்ந்த சீமான் ஆகிய விஷயங்களை பிரதானமாக தனக்கு ஆதரவாக விஜய் பரப்புரையில் பயன்படுத்துவார். விஜய்யின் அந்த துருப்புச்சீட்டு அவருக்கு ஆதரவாக முடிந்தால் திமுக-வைக் காட்டிலும் அதிமுக, நாம் தமிழருக்கு மிகப்பெரிய பின்னடைவை அது உண்டாக்கும். 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை...முதலமைச்சர் விஜய்க்கு தாடி பாலாஜி வீடியோ
கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை...முதலமைச்சர் விஜய்க்கு தாடி பாலாஜி வீடியோ
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
மதுரை ஆட்சியருக்கு சமூக வலைதள மிரட்டல்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் பாதுகாப்பு தீவிரம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
Embed widget