மேலும் அறிய

TNPSC | பணம் கொடுத்து அரசுப் பணிக்கு நோ: அனைத்து அரசுப் பணிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமே தேர்வு

அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும், இனி டிஎன்பிஎஸ்சியே தேர்வு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும், இனி டிஎன்பிஎஸ்சியே தேர்வு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத் திருத்த மசோதாவை நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். 

தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி (TNPSC) சார்பில்,  குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர், குரூப் 8 எனப் பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இதில், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் துறைக்குள்ளாகவே தனித்தனியாகத் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்து வந்தன. 

இத்தகைய அரசுப் பணியாளர்கள் தேர்வில், பெரும்பாலும் பணம் கொடுத்தே தேர்வு நடைபெறுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் காலியிடங்களை, டிஎன்பிஎஸ்சியே தேர்வு நடத்தி இனி நிரப்பும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்த முன்வரைவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.

இதன்மூலம் பணம் கொடுத்து அரசு வேலை பெறும் போக்கு பெருமளவில் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  

முன்னதாக தமிழக வேலை தமிழர்களுக்கே என்ற அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு, அனைத்து வகையான அரசுப் பணித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வில் தேர்வர்கள் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget