அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி! அபராதம் விதித்த கோர்ட்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு 25 ஆயிரம் ரூபாயுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.
கண்டித்த உச்ச நீதிமன்றம்
அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெஜெ கட்சியின் நிறுவனருமான பி.ஏ. ஜோசஃப் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று (ஜூலை.07) விசாரணைக்கு வந்த நிலையில், விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு இது எனக் கண்டித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக “அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார். மேலும் ரூ. 1000 கோடி செலவிட உள்ளார் என பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையேயான உரசல், சாதி ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ஆம் தேதி மனு அனுப்பியும், பதிலும் இல்லை” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓபிஎஸ் அணிக்கு சறுக்கல்
நேற்று (ஜூலை.06) ஈபிஎஸ் க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிடவும் மறுப்பு தெரிவித்தது.
அதே போல், அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ABP Nadu Exclusive: : ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்டவர்... இளையராஜாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்