அடுத்தமுறை டெல்லி செல்லும்போது... - இபிஎஸ்சிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்
சட்டப்பேரவையில் மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட மசோதாவை எதித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜக மட்டும் வெளிநடப்பு செய்தது. பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய சட்ட மசோதாவை எதித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து பேசிய எஸ்.பி.வேலுமணி. “வக்பு வாரியத்தின் அடிப்படையை சிதைக்கும் வகையில் சட்டதிருத்தம் உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்த சட்டதிருத்தம் உள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை இஸ்லாமியர்கள்தான் நிர்வகிக்க வேண்டும். மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்தத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு தெரிவிக்கிறது” எனத் தெரிவித்தார்.
அதேபோல் பாமகவும் முதலமைச்சரின் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
இதையடுத்து பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பாஜகவைத் தவிர அனைத்துக்கட்சிகளுக்கு நன்றி. டெல்லி சென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருமொழிக்கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல் அடுத்த முறை டெல்லி செல்லும்போது வக்பு வாரிய சட்டதிருத்தம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

