Agni Nakshatram : இன்று தொடங்குகிறது கத்தரியாய் வெட்டும் அக்னி நட்சத்திரம் ..வெயிலை சமாளிக்க டிப்ஸ்...
இன்று (மே 4-ஆம் தேதி) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
இன்று (மே 4-ஆம் தேதி) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28-ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மார்ச் முதல் ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. குறிப்பாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அக்னி நட்சத்திரம் நாட்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஒரு பக்கம் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும், மற்றொரு புறம் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனாலும், இன்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கும் என்ற செய்தி தான் பெரும்பாலோனோருக்கு, வெயிலை எப்படி சமாளிக்கப்போறோமோ என்ற உணர்வை கொடுக்க கூடியதாக உள்ளது.
வெயிலை சமாளிக்க:
பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் ஆகியோர் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது வெயிலினால் உடலில் ஏற்படும் அதிகபடியான உஷ்ணத்தை தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்
நீர் சத்து அதிகம் உள்ள தர்பூசணி, கிர்னி பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும்
பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.. இது உடல் உஷ்ணத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்க உதவும்
வெளியில் செல்லும் போது குடைகளை கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது படுவதை தவிர்க்கலாம்
முகத்தை அடிக்கடி வெறும் தண்ணீரால் கழுவ வேண்டும். இதான் சருமம் பாதுகாக்கப்படும்
வெளியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம். சருமம் சூரிய கதிர்களால் கருமை மற்றும் சேதமடைவதை தடுக்க உதவும்
அதிகப்படியான வெப்பம் உடல் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் போது நாம் நம் உடல் மீது போதுமான அளவு அக்கரை எடுத்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.