மேலும் அறிய

அச்சுறுத்தும் கோவிட்! ஈபிஎஸ் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்!

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஒருவார காலமாக அதிமுக கட்சியின் நிலவரங்கள் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தும் பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். இதனிடையே நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள்  ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் 65 பேர் கலந்து கொண்ட நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்த வித ஒப்புதலையும் கூட்டத்திற்கு அளிக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 


அச்சுறுத்தும் கோவிட்! ஈபிஎஸ் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்!

இந்த கூட்டத்திற்கு முன்னதாக நேற்று காலை எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இரண்டு இடங்களிலும் நடந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அக்கட்சியின் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வந்தனர். 

அவர்களுக்கு ஆதரவாக தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக குவிந்த நிலையில் அதிமுக கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருக்கும் பிரச்சனை ஒருபுறம் என்றால், மறுபுறம் கொரோனா பிரச்சனையும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Embed widget