மேலும் அறிய

Actor Vijay Rolls Royce Case | ”குற்றவாளிபோல...” : தனி நீதிபதியின் கருத்து மனதை புண்படுத்தியது.. - நடிகர் விஜய் வேதனை

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் தனிநீதிபதியின் கருத்து தனது மனதை புண்படுத்தியதாக நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த நிலையில், நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் தனி நீதிபதியின் கருத்தை நீக்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கவும், அவர் விதித்த ஒரு லட்சம் அபராதத்தை செலுத்த தடை விதிக்கவும் வேண்டும். நுழைவு வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.

Actor Vijay Rolls Royce Case | ”குற்றவாளிபோல...” : தனி நீதிபதியின் கருத்து மனதை புண்படுத்தியது.. - நடிகர் விஜய் வேதனை

நிலுவைத் தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7-ந் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டதாலும் நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பில் இருந்து அகற்ற வேண்டும்.

நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக உள்ள பிரச்சினை. சுங்கவரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசுதான் சட்டம் இயற்ற முடியும். இறக்குமுதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை இருந்ததாலே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது.

Actor Vijay Rolls Royce Case | ”குற்றவாளிபோல...” : தனி நீதிபதியின் கருத்து மனதை புண்படுத்தியது.. - நடிகர் விஜய் வேதனை

நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. நடிகர்கள் நுழைவுவரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதைத் தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கம் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்கக்கூடாது. வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை. கடின உழைப்பால் கார்வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது.

சினிமா துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. வரிஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை. மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்துள்ளோம். தன்னைத் தேச விரோதியாக கூறுவது தவறு. நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை. நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துபவர்களை ஆய் செய்யலாம். அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம். ஆனால், இந்த வழக்கில் தேவையில்லை. வரிகேட்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.” என்று வாதிட்டார்.

Actor Vijay Rolls Royce Case | ”குற்றவாளிபோல...” : தனி நீதிபதியின் கருத்து மனதை புண்படுத்தியது.. - நடிகர் விஜய் வேதனை

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் கருத்துக்களை நீக்கக்கோரி தொடர்புடைய நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு வழக்கறிஞர், “ இந்த வழக்கு மட்டுமில்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று நடிகர்கள் எனப் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், தன்னை குற்றவாளிபோலக் காட்டியுள்ளது வேதனைபடுத்தியுள்ளது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. 2 கோடி ரூபாய் செலுத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்மறை  கருத்துக்களை நீக்க வேண்டும்.” என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget