ஆவின் பால்பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் லோகோ..! தமிழக அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்..!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரபலப்படுத்தும் விதமாக குதிரைவடிவ இலச்சினையுடன் கூடிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை சதுரங்க போட்டி அட்டை நிறத்திற்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக அரசு பல வகையில் செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தி வருகிறது.
தற்போது, தமிழக அரசின் ஆவின் நிறுவனங்களில் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட்டின் லோகோவான வேட்டி கட்டிய குதிரை இலச்சினையை அனைத்து ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக #நம்ம_செஸ், #நம்ம_பெருமை எனும் வாசகத்தோடும் #44th_CHESS_OLYMPIAD இலச்சினையை @AavinTN அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளிலும் அச்சிட்டிருப்பது பாராட்டுக்குரியது. #TNMilkAssociation @CMOTamilnadu pic.twitter.com/s6Tf5lw7qh
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) July 26, 2022
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக நம்ம செஸ், நம்ம பெருமை எனும் வாசகத்தோடும் 44வது செஸ் ஒலிம்பியாட் இலச்சினையை ஆவின் நிர்வாகம் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளிலும் அச்சிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
அதுபோல தமிழகத்தின் பாரம்பரியமிக்க கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளம்பரப்படுத்த @AavinTN நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். #TNMilkAssociation @CMOTamilnadu @subbuias
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) July 26, 2022
அதுபோல தமிழகத்தின் பாரம்பரியமிக்க கபடி, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளம்பரப்படுத்த ஆவின் நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்