உடற்பயிற்சி மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்!

Published by: ABP NADU

உடற்பயிற்சி செய்வதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து, கவன திறனை மேம்படுத்துகிறது

உடற்பயிற்சி மூலம் எண்டோர்பின்கள் ஹார்மோன்கள் வெளிவந்து, மனஅழுத்தம் மற்றும் கவலையை குறைக்கிறது

வழக்கமாக சுறு சுறுப்பாக இருப்பதால், நல்ல உறக்கம் ஏற்படும்

உடல் ரீதியாக எலும்புகள், தசைகள் பலப்படுவது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்

உடற்பயிற்சி செய்வதால், நம் ஆற்றல் திறன் அதிகம் ஆகும். இதனால் தினசரி வேலைகளை எளிதாக செய்ய முடியும்

உடலை திடப்படுத்துவதால், மனதைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்

உடற்பயிற்சி செய்யும் மாணவர்களின் கல்வி, செயல்திறன் நன்றாக இருக்கும்