மேலும் அறிய

உயர்ந்து வந்த நிலையில் திடீரென சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரியத் துவங்கியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மேட்டூர் அணை நீர்வரத்து மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.37 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 491 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 11 ஆயிரத்து 392 கன அடியாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 8 ஆயிரத்து 603 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 35.66 டி.எம்.சி ஆக குறைந்து உள்ளது. 

உயர்ந்து வந்த நிலையில் திடீரென சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்

கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையிலிருந்து 15,170 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120.68 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 108 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5,505 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரியில் உபரி நீர் வினாடிக்கு 16 ஆயிரத்து 205 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரத்து 392 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 8 ஆயிரத்து 603 கன அடியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக நிர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உயர்ந்து வந்த நிலையில் திடீரென சரியத் தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.97 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 36.20 டி.எம்.சி ஆக குறைந்துள்ளது. அணையின் நீர்வரத்து 7 ஆயிரத்து 491 கன அடியிலிருந்து 11 ஆயிரத்து 392 கன அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து மீண்டும் குறைய துவங்கியுள்ளதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget