மேலும் அறிய

மீண்டும் சரியத் துவங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து!

நேற்று 22 ஆயிரத்து 875 கன அடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 22,076 கன அடியாக குறைந்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று சரிய துவங்கியுள்ளது, இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.69 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 670 கன அடி நீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 22 ஆயிரத்து 875 கன அடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 22,076 கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 35.05 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் சரியத் துவங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து!
கேரளா, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 60.77 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 6,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் மட்டம் 116.52 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 9,609 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 22,875 கன அடியாக வந்து கொண்டிருந்த இந்நிலையில் இன்று 22,076 கன அடியாக குறைந்துள்ளது.

மீண்டும் சரியத் துவங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து!
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.10 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 33.65 டி.எம்.சி ஆக உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டால் அணையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படும். டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 14,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 700 கன அடியில் இருந்து 650 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் வரத்து அதிகரித்து, சரிந்து வருவதால் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் , திருவாரூர் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை , சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
Embed widget