மேலும் அறிய

Traffic Diversion: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்.. எங்கு, எப்போது? இதை படிங்க..

இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளான இன்று பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை அருகாமையில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகரம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. 

விநாயகர் சிலைகள் கரைப்பு:

சேலம் மாநகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொதுமக்கள் வைத்துள்ள விநாயகர் சிலைகள் இன்று காலை 10 மணிக்குள் எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியான கன்னங்குறிச்சி மூக்கணேரியில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விநாயகர் சிலைகள் இன்று நண்பகல் 12 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று காலை 11.00 மணிக்குள் சிலை வைத்துள்ள பகுதிகளில் இருந்து எடுத்து ஊர்வலம் புறப்படும் இடமான எல்லைபிடாரி அம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையான எல்லைபிடாரி அம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மாற்றம்:

இதன்படி, சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி வரை செல்லும் வாகனங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா, நான்கு ரோடு, ராமகிருஷ்ணா ரோடு, சாரதா கல்லூரி சாலை வழியாக அஸ்தம்பட்டி ரவுண்டானா செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி, சேலம் நீதிமன்றம், மத்திய சிறை, மாவட்ட ஆட்சியர் பங்களா, ஐயந்திருமாளிகை வழியாக கன்னங்குறிச்சி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. 

அஸ்தம்பட்டி முதல் பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் வாகனங்கள் அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா ரோடு, நான்கு ரோடு, அண்ணா பூங்கா, பெரியார் மேம்பாலம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு சேலம் மாநகர காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"தயவுசெஞ்சு பட்டாசு வெடிக்காதீங்க" வீடு வீடாக சென்று கவுன்சிலர் வைத்த உருக்கமான கோரிக்கை - எதற்காக தெரியுமா?
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
உலக அரங்கில் ஓமலூருக்கு பெருமை சேர்த்த மாணவி - மேளதாளம் முழங்க மாஸ் வரவேற்பு கொடுத்த ஊர் மக்கள்
உலக அரங்கில் ஓமலூருக்கு பெருமை சேர்த்த மாணவி - மேளதாளம் முழங்க மாஸ் வரவேற்பு கொடுத்த ஊர் மக்கள்
161-வது ஆண்டில் எஃகு நகரம்.. சேலம் உருவான கதை தெரியுமா? வியக்கவைக்கும் வரலாற்று உண்மைகள்
161-வது ஆண்டில் எஃகு நகரம்.. சேலம் உருவான கதை தெரியுமா? வியக்கவைக்கும் வரலாற்று உண்மைகள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஏன் வைதீக முறைப்படி பேத்தி கல்யாணம் நடந்தது?" - துரைமுருகன் பரபரப்பு அறிக்கை.. சொன்ன காரணம் என்ன?
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
TVK vs DMK: அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை யார் ஆட்சியில் வழங்கப்பட்டது? திமுக-விற்கு தவெக கேள்வி
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
“பெரியார் பேர வச்சு கொள்ளையடிக்கிறீங்க” திமுக தலைகுனிவது உறுதி - முதல்வர் விஜய் ஆவேசம்
"அந்த போலி புக்கெல்லாம் கொளுத்துங்கடா" பெரியார் பேரை வச்சு ஊழலா? கமல்ஹாசன் ஆவேசம்
"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
Dhanush OM Audio Launch 2026: தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
தாம்பரத்தில் குவிந்த தனுஷ் தொண்டர்கள்! அரசியல் அறிவிப்பு வருமா? குட்டி ஸ்டோரி சொல்வாரா?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Maruti Suzuki Offers: ரூபாய் 1.21 லட்சம் ஆஃபர்.. 14 கார்களுக்கு தீபாவளி தள்ளுபடி அறிவித்த மாருதி சுசுகி! எந்தெந்த கார்?
Embed widget