மேலும் அறிய

தமிழக அரசு சாலை வரி மசோதாவை நிறுத்தி வைக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் - லாரி உரிமையாளர்கள்

லாரி உரிமையாளர்களின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் காலவரையறையற்ற வேலை நிறுத்தமா? அல்லது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் என்பது குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில செயலாளர் தன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த இரண்டு நாட்களாக லாரி உரிமையாளர்கள் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். கடந்த 11 ஆம் தேதி சட்டமன்றத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் காலாண்டு சாலைவரியை உயர்த்த நிலுவையில் மசோதா தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் கனரக வாகனங்கள் 6 லட்சம் லாரிகளை இயக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. ஏற்கனவே சுங்க கட்டணம், டீசல் உயர்வு உள்ளிட்டவைகள் காரணமாக லாரிகளை இயக்க முடியாமல் இருந்து வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து லாரிகளுக்கு அபராதத் தொகை தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் காவல்துறையிடம் எடுத்து உரைத்த பின்னர் 15 சதவீதம் குறைத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சாலை வரி மசோதாவை நிறுத்தி வைக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் -  லாரி உரிமையாளர்கள்

ஆனால் போக்குவரத்துதுறை அமைச்சர் காலாண்டு சாலை வரி உயர்வை தாக்கல் செய்துள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மூடும் மந்திரமாகவே அறிவித்துள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் தெரிவிக்கவில்லை. இதில் 15 ஆயிரம் கிலோ எடைக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திற்கும், ஒவ்வொரு 250 கிலோ இருக்கும் 100 ரூபாய் வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறுசக்கர லாரிகளுக்கு 950 ரூபாய், 10 சக்கர லாரிகளுக்கு 2100 ரூபாய், 12 சக்கர லாரிகளுக்கு 2800 ரூபாய், 16 சக்கர லாரிகளுக்கு 4500 என அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செலுத்தும் நிலை உள்ளது. இதன்மூலம் 40 சதவீத அளவிற்கு வரி உயர்ந்துள்ளது. இதுகுறித்து முறையிட்டபோது அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளதாக கூறியுள்ளார். அண்டை மாநிலத்தை ஒப்பிடும் அமைச்சர் டீசல் விலையை பொறுத்தவரை கர்நாடகாவில் 7.50 ரூபாய் குறைவாகவே உள்ளது. இவ்வாறு இருக்கும்போது எவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ஒப்பிடுகிறார் என்பது தெரியவில்லை என்றார். இதுகுறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், இதற்கு நல்லமுடிவு வரும் என்று காத்திருப்பதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சாலை வரி மசோதாவை நிறுத்தி வைக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் -  லாரி உரிமையாளர்கள்

தமிழக அரசை பொருத்தவரை லாரி உரிமையாளர்கள் அனைவரும் தொழிலதிபர் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். அரசு எந்த நலத்திட்ட உதவிகள் அறிவித்தாலும், முதலில் கை வைப்பது லாரி உரிமையாளர்கள் மீது தான் என்றும் பேசினார். தமிழகத்தில் வரிகட்டுவதை பொறுத்தவரை மற்ற தொழில்களைவிட, லாரி உரிமையாளர்கள் முன்னதாகவே வரி கட்டிவிட்டு தான், லாரியை இயக்குகிறார்கள். லாரி உரிமையாளர்கள் விஷயத்தில் எந்தவித தவறுகளும் நடைபெறாது. லாரி உரிமையாளர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே தமிழக அரசு காலாண்டு சாலை வரி உயர்வை நிறுத்தி வைத்து லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் நாமக்கல்லில் பொதுக்குழு 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 135 அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இதில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமா? அல்லது காலவரையறையற்ற வேலை நிறுத்தமா என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் அறிவித்துள்ளனர். இதனால் லாரி உரிமையாளர்கள் வாடகையே உயர்த்தினால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் அதனால் லாரி உரிமையாளர்களும் பொதுமக்களில் ஒருவர்தான், பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை என்றார். தமிழக முதல்வர் காலாண்டு சாலை வரியை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு கோடி குடும்பங்கள் லாரி தொழிலை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்களை காப்பாற்றவேண்டும் என்று கோரிக்கை தான் தமிழக முதல்வரிடம் வைப்பதாக கூறினார். தமிழக அரசுக்கு எப்போது நிதி தேவைப்பட்டாலும் வரி உயர்வு என்பது வந்து விடுகிறது. இதற்கு முன்பாக 19 ஆண்டுகளுக்கு முன்பு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்பொழுது இருந்த தொழில் வேறு, தற்போது லாரி தொழில் நசுங்கிப் போய்விட்டது. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, வாழ்வாதாரத்தை இழந்து லாரியை நிறுத்தும் நிலை தான் லாரி உரிமையாளர்களுக்கு இருந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget