மேலும் அறிய

நிலத்துக்காக முதல் மனைவியை கொன்ற இரண்டாவது மனைவி - தருமபுரியில் கொடூரம்

கிருஷ்ணனின் முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை இரண்டாவது மனைவி ராமி, பணம் ரூ.5 லட்சம் கொடுக்கிறேன் நிலத்தை தனக்கு எழுதி கொடுக்கும்படி ரஞ்சிதத்திடம் கேட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவருக்கு ரஞ்சிதம்(70), ராமி(45) என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ரஞ்சிததிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்பதால் கிருஷ்ணன் ராமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

இதனையடுத்து இரண்டாவது மனைவி ராமிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு மனைவிகளும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வசித்தனர். 

நிலத்துக்காக முதல் மனைவியை கொன்ற இரண்டாவது மனைவி - தருமபுரியில் கொடூரம்

சூழல் இப்படி இருக்க, கிருஷ்ணனின் முதல் மனைவி ரஞ்சிதம் பெயரில் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை இரண்டாவது மனைவி ராமி, பணம் ரூ.5 லட்சம் கொடுக்கிறேன், நிலத்தை தனக்கு எழுதி கொடுக்கும்படி ரஞ்சிதத்திடம் கேட்டுள்ளார். 

அதற்கு ரஞ்சிதம், நிலத்தை தர முடியாது என மறுத்துள்ளார். இந்த 2 ஏக்கர்  விவசாய நில பிரச்சினையால், ரஞ்சிதம், ராமி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் (3.2.2022) பிற்பகல் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்பொழுது ரஞ்சிதம் நிலத்தை தருவதற்கு தொடர்ந்து மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமி யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து வீட்டுக்கு வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சிதம் மீது ஊற்றி தீ வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

நிலத்துக்காக முதல் மனைவியை கொன்ற இரண்டாவது மனைவி - தருமபுரியில் கொடூரம்

தொடர்ந்து தீப்பற்றி எரிந்ததால், ரஞ்சிதம் அலறியுள்ளார். இதனை கண்ட ராமியின் மகன் மோகன், சத்தமிட்டவாறு ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ரஞ்சிதத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

நிலத்துக்காக முதல் மனைவியை கொன்ற இரண்டாவது மனைவி - தருமபுரியில் கொடூரம்

ஆனால், தீ காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரஞ்சிதம் அழைத்து செல்லப்பட்டார். 70 வயதான ரஞ்சிதம், 80 சதவீதம் தீக்காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இரண்டாவது மனைவி ராமியை கைது செய்தனர். இந்தச் சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!

Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

Embed widget