மேலும் அறிய

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, 60 அடி பாலம், 80 அடி பாலம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தளமான ஏற்காட்டில் நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு, 60 அடி பாலம், 80 அடி பாலம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை மற்றும் தடுப்பு சுவர் மீது ராட்சத பாறைகள் மற்றும் கற்கள் சரிந்து கீழ் சாலையில் விழுந்த காரணத்தால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

நேற்று மாலையும் தொடர்ந்து மிதமான மழை பெய்த போதிலும் இரவு முழுவதும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலைகள் விழுந்திருந்த மரங்களை பொதுப்பணி துறையினருடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அகற்றினார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் இவற்றிலிருந்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சரிவு ஏற்படலாம் என்பதற்காக அடிவாரத்தில் உள்ள காவல் துறையின் சோதனை சாவடியிலேயே வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 

கடந்த ஆண்டு இதேபோன்று ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகள் இதுவரை சீர்படுத்தாமல் சேலம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் கொண்டு வந்தது. இது குறித்து கடந்த வாரம் ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பதிவிற்கான மழையால் கடந்தாண்டு மண் சரிவு ஏற்பட்ட அதே இடங்களில் மீண்டும் பத்திருக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவால் பரபரப்பு.. போக்குவரத்துக்கு தற்காலிக தடை..

நேற்று இரவு ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் தடுத்த நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். சாலையை சீர்படுத்த ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் குப்பனூர் - ஏற்காடு சாலையை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் 146.2 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 58 மி.மீ மழை பெய்தது. அதிகபட்சமாக வீரகனூரில் 20.00 மி.மீ மழை பதிவானது. கங்கவல்லியில் 20 மி.மீ மழையும், சேலத்தில் 11.7 மி.மீ, காரிய கோவில் 17 மி.மீ, காடையாம்பட்டி 5 மி.மீ, சங்ககிரி  2.1 மி.மீ, ஓமலூர் 11 மி.மீ, எடப்பாடி 1.4 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK CouncillorTVK Issue : 60 லட்சம் மோசடி!தவெக நிர்வாகி மீது புகார்தலைவலியில் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
இந்தியர்களின் கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டதா? அமெரிக்காவிலிருந்து எப்படி அனுப்பப்பட்டனர்?
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?
ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?
Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்
Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்
Zomato Name Change: புதுப்பெயரை மாற்றிய zomato: ஒப்புதலும் வாங்கியாச்சு! என்ன பெயர்? வெளியான காரணம்!
Zomato Name Change: புதுப்பெயரை மாற்றிய zomato: ஒப்புதலும் வாங்கியாச்சு! என்ன பெயர்? வெளியான காரணம்!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
”மேற்கு வங்க பெண்ணை சென்னையில் கடத்தி துன்புறுத்தல்” இருவரை கைது செய்தது காவல்துறை..!
Embed widget