சேலத்தில் செய்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜகவினர்
அய்யாகண்ணு, திருமாவளவன், சீமான், நடிகர் சித்தார்த், சூர்யா, சமுத்திரகனி, சத்யராஜ், இயக்குனர் அமீர், கௌதமன் ஆகியோருக்கு எதிராக ஒறுமையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தேங்காய் விலை சரிவால் ஏற்பட்டுள்ள தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், பொங்கல் தொகுப்பில் தேங்காயையும் இணைத்து தமிழக அரசு வழங்க கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெளிநாட்டு இறக்குமதியான நோய்கள் தரும் பாமாயிலை தவிர்த்து உடலுக்கு சத்தான தேங்காய் எண்ணெய்க்கு முக்கியத்துவம் தரகோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேலம் பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பாஜக சார்பில் திமுக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தின் போது கோசங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பேசிய சேலம் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ், திமுக ஆட்சி அமைப்பதற்காக விவசாயிகள் என கூறிக் கொண்டு போராடிய அய்யாக்கண்ணு என்றும், அய்யாக் கண்ணுவை ஒறுமையில் விமர்சித்ததோடு மற்ற விவசாயிகளையும் ஒறுமையில் விமர்சித்து கண்டன உரை ஆற்றினார்.
இதனை அடுத்து உரையாற்றிய மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். இனி வரும் காலங்களில் இது போன்று நடந்தால் பின் விளைவு வேற மாதிரி இருக்கும் என எச்சரித்தார். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் அய்யாகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சித்தார்த், சூர்யா, சமுத்திரகனி, சத்யராஜ், இயக்குனர் அமீர், கௌதமன் உள்ளிட்டர்களை எதிராக ஒறுமையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இந்த நிகழ்வில் 2000 தேங்காய்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு சேலம் மாநகர காவல்துறை அனுமதி தராததால் தேங்காய் வழங்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அக விலைப்படி, முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக் கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் முதல்வர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர் அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசமிட்டனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, மாநில மகளிர் அணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்டு சங்கத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.