மேலும் அறிய

சேலம்: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோர்: நன்றி தெரிவித்த அமைச்சர்!

ஊரக பகுதிகளிலும் 'உடல் உறுப்பு தானம்' பெருமை அளிக்கிறது. தியாகம் செய்த பெற்றோருக்கு நன்றி

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன், வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன் (26), இவர் சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் குடும்பத்தை மணிகண்டன் தான் வழிநடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகில் வந்தபோது லாரி மோதி படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 

சேலம்: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோர்: நன்றி தெரிவித்த அமைச்சர்!

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர். அப்போது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசித்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு மருத்துவர்கள் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலமாக எடுத்தனர்.

பின்னர் இருதயம், கண்கள், இருதயவாழ்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பான தகவலையும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இருதயம் மற்றும் நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது. 

காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மணிகண்டனின் சகோதரி உடல் உறுப்புகள் எடுத்துச்சென்ற பெட்டியை பிடித்துக் கொண்டு கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்கள் கண்ணீரை வரவழைத்தது.

சேலம்: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோர்: நன்றி தெரிவித்த அமைச்சர்!

இது குறித்து மணிகண்டனின் தந்தை கூறும்போது என் மகன் இறந்தும் எட்டு பேருக்கு உயிர் கொடுத்து உள்ளார் என்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அவர் இல்லாமல் மிகுந்த வேதனையில் வாடுவதாக தெரிவித்தார். தனது குடும்பத்தை வழி நடத்தி வந்த மகன் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் தனது இரண்டாவது மகனுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் "சேலம் மல்லூரில் இளைஞர் மணிகண்டன் விபத்தொன்றில் மூளைச்சாவு ஏற்ப்பட்டு உடல் உறுப்புகளை அவரின் பெற்றோர் 'உடல் உறுப்பு தானம்' செய்துள்ளனர். ஊரக பகுதிகளிலும் 'உடல் உறுப்பு தானம்' பெருமை அளிக்கிறது. தியாகம் செய்த பெற்றோருக்கு நன்றியும் உறுதுணையாக இருந்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்களும்" என்று பதிவிட்டுள்ளார். ‌

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்

T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?

Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?

Embed widget