Mettur Dam: முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை... இன்றைய நீர் நிலவரம் இதோ
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 21,628 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர் திறப்பு 18,000 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று முன்தினம் வினாடிக்கு, 18,220 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று வினாடிக்கு, 21,628 கனஅடி யாக அதிகரித்தது. கடந்த, 20ல், வினாடிக்கு, 16,000 கனஅடி யாக இருந்த டெல்டா நீர்திறப்பு, நேற்று காலை முதல், 18,000 கன அடியாக அதிகரிப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், நேற்று முன்தினம், 113.81 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 114 அடியாக உயர்ந்தது.

கர்நாடகாவில் தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் கூடுதல் நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கி உள்ளது. இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, 12ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி வரும் நிலையில், அவற்றில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், பிலிகுண்டுலு நீரளவை தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,628 கன அடிக்கு மேல் நீர் வரத்து கிடைத்தது. அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு, 16,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசன நீர் திறப்பை அதிகரிக்க நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது. தஞ்சாவூர் கல்லணையில் இருந்து, கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.

ஒகேனக்கல்லில் 3வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரியாற்றில் குளிக்க, மூன்றா வது நாளாக நேற்றும் தடை தொடர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள அணை களில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீரால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வ ரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 19,000 கன அடியானது.
நீர்வரத்து அதிகமாக உள்ளதால், ஒகேனக் கல்லில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மூன்றாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர் வாகம் தடையை நீட்டித்தது. நேற்று வார விடுமுறை என்பதால், ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அரு விகளில் குளிக்க முடியாததால், பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து, காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.





















