30% டிஸ்கவுண்ட்! சேலத்தில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்! புதிய பட்டு ரகங்கள் என்னென்ன இருக்கு?
சேலத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.

சேலத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 4.42 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 91 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு விழா காலங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று சேலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு புதிய ரகமாக அசல் ஜெரியுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டுப்புடவைகள், சேலம் பட்டு புடவைகள், மென்பட்டு புடவைகள் ஏராளமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

சேலைகள் மட்டுமன்றி, இல்லங்களுக்குத் தேவையான போர்வைகள், உயர்தரப் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள் ஆகியவையும் இச்சிறப்பு விற்பனையில் இடம் பெற்றுள்ளன. ஆண்களுக்கான வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்திச் சட்டைகள், பண்டிகைக் கால சிறப்பு மாப்பிள்ளை செட் மற்றும் பெண்களுக்கான நைட்டிஸ் போன்ற அனைத்து வயதினருக்குமான ஆடை இரகங்களும், ஏற்றுமதி தரத்திலான ஆடைகளும் ஏராளமான அளவில் வாடிக்கையாளர்களின் தேர்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் 4.42 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















