மேலும் அறிய

Jail Police Library: சேலம் மத்திய சிறையில் பணியாளர்கள் படிப்பதற்காக நூலகம் திறப்பு

சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் நூலகத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை பணியாளர் குடியிருப்பு பகுதியில் பணியாளர்கள் படிப்பதற்காக நூலகம் திறக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் சிறை ஆகியவற்றை 350-க்கும் மேற்பட்ட சிறைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை அருகாமையில் சிறை காவலர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சிறை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்படுத்தும் வகையில் சிறப்பு நூலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சேலம் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் நூலகத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார். குறிப்பாக போட்டித் தேர்வு புத்தகங்கள், குழந்தைகளுக்கான கதை புத்தகங்கள், சரித்திர புத்தகங்கள், சிறுகதை புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறை பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளார் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

Jail Police Library: சேலம் மத்திய சிறையில் பணியாளர்கள் படிப்பதற்காக நூலகம் திறப்பு

இதில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நூலகத்தில் அரசின் அனைத்து பணியாளர்கள் தேர்வு, போட்டித் தேர்வு, டி என் பி எஸ் சி தேர்வுகள் உட்பட பல அரசு தேர்வுகளுக்கான முக்கிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதேபோன்று சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகள் சிறை துறை தேர்வு எழுதுவதற்கும், மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்கள் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் போன்று பதவி உயர்வு பெறுவதற்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் இருப்பதால் சிறைத் துறை காவலர்கள் மன அழுத்தம் குறைப்பதற்கும் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

Jail Police Library: சேலம் மத்திய சிறையில் பணியாளர்கள் படிப்பதற்காக நூலகம் திறப்பு

ஆயிரம் புத்தகங்களை கொண்டு இன்று சிறிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகமானது, வரும் காலத்தில் பரப்பளவை பெரிதுபடுத்தி மிகப்பெரிய நூலகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, பல அறிவு சார்ந்த புத்தகங்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வீட்டில் உள்ள பெண்களுக்கான புத்தகங்கள் என ஒரு லட்சம் புத்தகங்கள் வரை வைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இதனை சிறைத்துறை பணியாளர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கூறினர். இந்த நூலக திறப்பின்போது சேலம் மாவட்ட நூலக அலுவலர் சேகர், மத்திய சிறையின் ஜெயிலர், சேலம் பெண்கள் சிறை ஜெயிலர், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிறை துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
Embed widget