மேலும் அறிய

காவிரி ஆற்றில் வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறக்க வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 120 அடியே எட்டியது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 89 ஆண்டுகளில் 42 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை நிரம்பியதால் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக உபரி நீர் வெளியேற்றி வருகின்றனர். இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 28,000 கன அடியாக குறைந்த நீர் கருத்து தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. 

காவிரி ஆற்றில் வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறக்க வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து 16 கண் மதகுகளில் உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள்ளாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 60 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 27,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டிய நிலையில், தற்போது நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. எனவே காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவேரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகம் உள்ளதால் நேற்று முன்தினம் ஒகேனக்கலில் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டது. 

காவிரி ஆற்றில் வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறக்க வாய்ப்பு- 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை

நீர்வரத்தானது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் காவிரிக் கரையில் அமைந்துள்ள சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறையினருக்கு மேட்டூர் அணையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget