பெற்றோர் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..? - சேலத்தில் சோகம்
பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டதால் பெற்றோர் கண்டித்ததால் திடீர் முடிவு.
சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்று காலை பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டார். பள்ளிக்குச் செல்லாத மாணவியை அவரது பெற்றோர் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவரது தாயாரின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் காவல் ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மாணவி ஏன் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை? தற்கொலை செய்து கொண்டதற்கு பெற்றோர் கண்டித்தது தான் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் என அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் பெற்றோர்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தற்கொலை முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்