மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Milk Procurement Price: பால்கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் - தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கு கொடுக்காமல் சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால்கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கா விட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வெடிக்கும் என தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யும் பாலின் விலை லிட்டருக்கு 35 ரூபாய் வரை வழங்கி வருகிறது. இந்நிலையில் கால்நடைகளுக்கான தீவனம் விலை உள்ளதாகவும் 35 ரூபாய் விவசாயிகளுக்கு போதிய வருவாய் இல்லை எனக் கூறும் பால்வினை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கு கொடுக்காமல் சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி கூட்ரோடு பிரிவு சாலையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எஸ் ஏ சின்னசாமி தலைமையில் பால் விலை உயர்த்தி வணங்க வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கறவை மாடுடன் வந்து பாலை சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கால்நடைகள் விளையும் கால்நடைகளுக்கான தீவன விலையும் அதிகரித்துள்ளது ஆனால் பால் விலை மற்றும் 32 ரூபாய் வழங்க போதிய வருவாயாக இல்லை. எனவே ஆவினுக்கு வழங்கபடும் எருமை பால் லிட்டர் 52 ரூபாயும், பசும்பால் லிட்டர் 42 ரூபாய்க்கும் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் சங்கத்திற்கு மார்ஜின் தொகையை லிட்டருக்கு ரூ. 7 ஊக்கத் தெகை வழங்க வேண்டும். இதனை வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலயே இந்த அறிவிப்பினை வெளியிட வேண்டும். தங்களது கோரிக்கை நிறைவேற்றால் தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூடி மாநில தழுவிய போரட்டம் வெடிக்கும் என சின்னசாமி தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் கரவை மாடுகளுடன் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முழுக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
வேலைவாய்ப்பு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion