மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 252 கன அடியில் இருந்து 242 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 207 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 252 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 242 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 252 கன அடியில் இருந்து 242 கன அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 111.44 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 80.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 252 கன அடியில் இருந்து 242 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: மதிமுக மாநில நிர்வாகியை தட்டித்தூக்கிய எடப்பாடி.! ஷாக்காகி நிற்கும் வைகோ
மதிமுக மாநில நிர்வாகியை தட்டித்தூக்கிய எடப்பாடி.! ஷாக்காகி நிற்கும் வைகோ
T20 World Cup 2026: மீண்டும் அகமதாபாத்தா? வேணாம்ட மாப்ளே மோடில் ரசிகர்கள் - ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
T20 World Cup 2026: மீண்டும் அகமதாபாத்தா? வேணாம்ட மாப்ளே மோடில் ரசிகர்கள் - ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
SIR Online Form: இனி ஈசி.. வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் - ஆன்லைனிலேயே சமர்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ
SIR Online Form: இனி ஈசி.. வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் - ஆன்லைனிலேயே சமர்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: மதிமுக மாநில நிர்வாகியை தட்டித்தூக்கிய எடப்பாடி.! ஷாக்காகி நிற்கும் வைகோ
மதிமுக மாநில நிர்வாகியை தட்டித்தூக்கிய எடப்பாடி.! ஷாக்காகி நிற்கும் வைகோ
T20 World Cup 2026: மீண்டும் அகமதாபாத்தா? வேணாம்ட மாப்ளே மோடில் ரசிகர்கள் - ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
T20 World Cup 2026: மீண்டும் அகமதாபாத்தா? வேணாம்ட மாப்ளே மோடில் ரசிகர்கள் - ஐசிசி டி20 உலகக் கோப்பை அட்டவணை
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
அத்வானிக்கு பாராட்டு.. நேரு, இந்திராகாந்தி மீது விமர்சனம் - காங்கிரசை காண்டாக்கிய சசிதரூர்!
SIR Online Form: இனி ஈசி.. வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் - ஆன்லைனிலேயே சமர்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ
SIR Online Form: இனி ஈசி.. வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவம் - ஆன்லைனிலேயே சமர்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
RSS: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாமா? கன்டிஷன் போட்ட மோகன் பகவத்
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Sabarimala: ஐயப்ப பக்தர்களே... சபரிமலைக்கு போறீங்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க
Ration Shop: ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
ரேஷன் கடையில் கோதுமை எப்போது கிடைக்கும்.! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Mahindra XEV 9S: ப்ரீமியமும், டெக்கும் சேர்ந்த கார் இப்படிதான் இருக்கும்..! கலங்கும் போட்டியாளர்கள், கலக்கும் மஹிந்த்ரா
Embed widget