மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 10,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 828 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 748 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 694 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 116.65 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88.22 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 10,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
Ajit Doval: இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் எங்கே? அடங்காத தீவிரவாதிகள், யாருக்கு தோல்வி? மோடி ஆக்‌ஷன் எடுப்பாரா?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
PTR TN Cabinet: பிடிஆர்-க்கு தண்டனை ரெடி..! பேச்சால் கடுப்பான ஸ்டாலின் - ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Vice Chancellors meeting: கிளம்பிய சர்ச்சைகள்! ஊட்டியில் தொடங்கும் துணைவேந்தர்களுக்கான மாநாடு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
Pahalgam kashmir: மோடி வரல.. ”ஆமா, பாதுகாப்பு குறைபாடு தான்..” - உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
TNSTC Special bus: தொடர் விடுமுறை... ஊருக்கு போறீங்களா! உங்களுக்கான அப்டேட் இதுதான்...
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
CSK Vs SRH: மோசமானவர்களில் முக்கியமானவர்கள் யார்? ஐதராபாத்தை சாய்க்குமா சென்னை? சாதனையை தொடருமா தோனி படை?
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
IPL 2025 RCB vs RR: சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Embed widget